ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்! ரணில் முடிவு

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 10:20 am
sri-lanka-parliament-passes-another-no-confidence-motion-against-new-govt

ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ரணில் கட்சி எம்.பிக்கள் முடிவெடுத்துள்ளனர். 

இலங்கையில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், நாடாளுமன்ற ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் கூட்டத்தொடர் மோதலிலேயே முடிவடைகிறது. இந்த நிலையில், முன்னதாக ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 

நேற்றும், இலங்கை நாடாளுமன்ற அவையில் ரணிலுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அவரே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என சபாநாயகார் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அதிபர் சிறிசேன தரப்பில், 'கண்டிப்பாக ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அடுத்த பிரதமராக நியமிக்கப்பட மாட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது ரணிலுக்கு, பெரும்பான்மையை விட 9 உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் தங்களது பலத்தை நிரூபிக்கும் பொருட்டு, மீண்டும் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அக்கட்சியின் கட்சி எம்.பிக்கள் முடிவெடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close