இலங்கையில் அட்டூழியம்: மாகாண சபையில் ஆபாசப் படம் பார்த்த கவுன்சிலர்கள் 

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 04:03 pm
wp-councillors-caught-watching-porn-in-chambers

இலங்கை மேற்கு மாகாண சபையில், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணினியில் ஆபாசப்படம் பார்த்ததாக 3 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை மேற்கு மாகாண சபைக்கு சமீபத்தில் சுமார் 600 கோடி ரூபாயில் மதிப்பில் பட்டரமுல்லா நகரத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதில் புதன்கிழமை முதல் கூட்டம் நடந்தது. இங்கு அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு சபையில், அனைத்து கவுன்சிலர்களுக்கும் தனித்தனியே இணையதள வசதியுடன் கணினி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தின் போது நிதிநிலை அறிக்கையின் வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இலங்கையின் சுதந்திர கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் தங்களது கணினியில் ஆபாசப்படம் கொண்ட இணையதள பக்கத்தை திறந்து வைத்திருந்தது கேமராவில் பதிவானது. இந்த விவகாரம் ஊடகங்களில் கசிந்ததை அடுத்து, இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாகாண சபையில் உள்ள அனைத்து கணினிகளிலும் ஆபாச தளங்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தான் இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர், போலீசார் மீது மிளகாய்ப்பொடி கலந்த தண்ணீர் வீசப்பட்டதும், நாற்காலி மற்றும் குப்பைத்தொட்டிகள் பறந்ததுமாக கேலிக்கூத்து அரங்கேறின. இதனிடையே மாகாண சபையில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close