ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை!

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 06:53 pm
sri-lanka-parliament-stops-ministers-salaries-to-pressure-rajapaksa

ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ராஜபக்சே தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்கள் நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. 

கடந்த நவம்பர் 16ம்தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளும், மிளகாய்ப்பொடியும் வீசி வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவைக்கு உள்ளே அழைத்த நிலையில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவையும் ராஜபக்சே தரப்பினர் தாக்க முயன்றனர். 

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு பெரும்பான்மை அடிப்படையில் நியமிக்கப்பட்டது. 

இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் ராஜபக்சே தரப்பினர் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட அவையில் 123 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. ராஜபக்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டதால் தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. 

இதையடுத்து ராஜபக்சே அரசு நிதியில் இருந்து செலவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close