நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி - பிரதமராக முடியுமா?

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 11:11 am
ranil-wickramasingae-wins-in-confidence-motion-vote

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க மீது நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். மொத்தம் 225 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்பட 117 எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், 225 எம்.பி.க்களும் ஆதரவாக வாக்களித்தாலும்கூட ரணிலை பிரதமராக்கப் போவதில்லை என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்தபடி இருக்கிறது.

முன்னதாக, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை கடந்த அக்டோபர் மாதம் அப்பதவியில் இருந்து நீக்கிய சிறீசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், தனக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எம்.பி.க்களிடையே ஆதரவு திரட்டிய ராஜபக்சேவின் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பை சிறீசேனா வெளியிட்டார்.

ஆனால், அதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் கூடியபோது, ராஜபக்சேவுக்கு எதிராக 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அவர் பதவி விலகவில்லை. அதிபரும் அவரை பதவிநீக்கம் செய்ய மறுத்தார். இந்தச் சூழலில், ராஜபக்சே பிரதமராக நீடிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அவரது கட்சி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close