ரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 11:37 am
ranil-wickramasingahe-may-take-oath-tomorrow

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க நாளை பதவியேற்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே இன்று பதவி விலகவுள்ள நிலையில், ரணில் மீண்டும் பிரதமராகிறார். இதன் மூலமாக, 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கினார் அதிபர் சிறீசேனா. அதைத்தொடர்ந்து ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை அதிபர் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் நடவடிக்கைக்கு இலங்கை உச்சநீதிமன்றம் முதலில் இடைக்கால தடை விதித்தது. பின்னர் அதிபரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையே, புதிய பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ராஜபக்சே இன்று பதவி விலகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவுள்ளதாகவும், நாளை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close