இலங்கையில் கனமழை...!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 11:38 am
heavy-rain-lashes-in-srilanka

இலங்கை வடக்கு மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனிய மற்றும் ஜாப்னா உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கனமழையினால் சுமார் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியில் உள்ள சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. அதேபோல், கிளிநொச்சி பகுதியில் உள்ள மதகுகளின் கதவுகள் திறந்து விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் வேறு இட்டங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close