கொழும்பு : சர்ச்சில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 80 பேர் படுகாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 11:01 am
80-injured-in-blasts-at-two-sri-lanka-churches-during-easter-mass

இலங்கை தலைநகர் கொழும்பில் 6 வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 80க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர்  கூடியிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது..

இதேபோன்று, கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவத்தில் அதிக அளவு உயிாிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்களும்,  சிறப்பு அதிரடிப்படையினரும் சம்பவ இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close