இலங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

  முத்துமாரி   | Last Modified : 21 Apr, 2019 01:23 pm
all-schools-leave-for-next-two-day-srilanka-education-ministry

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு கருதி அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் இன்று காலை ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற கொண்டிருந்த தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  இதில், தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். 

இதையடுத்து, பாதுகாப்பு கருதி அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை அரசு சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close