இலங்கையில் அவசர நிலை- ஊரடங்கு உத்தரவு அமல்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 03:45 pm
160-dead-as-eighth-blast-hits-sri-lankan-capital-curfew-declared

இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து இன்று சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில்,150க்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளனா். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இலங்கையில் இன்று பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி என 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன.

இந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு உயிாியல் பூங்கா அருகே உள்ள ஹோட்டலில் 7வது குண்டு வெடித்தது. இதில் 2 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் கொழும்பு தெமடகொட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 8வது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதையடுத்து, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close