இலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு !

  டேவிட்   | Last Modified : 22 Apr, 2019 07:50 am
sri-lanka-pipe-bomb-found-near-colombo-airport

கொழும்பு சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியல் சக்தி வாய்ந்த “பைப்” வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்புவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொழும்பு விமான நிலையம் செல்லும் வழியல் சக்தி வாய்ந்த “பைப்” வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது. 

இந்த வெடிகுண்டு பெரிய பிளாஸ்டிக் குழாயில் பொருத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சர்வதேச நுழைவாயிலுக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்தது. இது ஒன்பதாவது வெடிகுண்டு. எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த ஒன்பதாவது வெடிகுண்டு, வெடிப்பதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close