இலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் !

  டேவிட்   | Last Modified : 22 Apr, 2019 11:14 am
srilanka-bomb-blast-290-killed-500-injured

கொழும்புவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 படுகாயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். 

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நான்கு நட்சத்திர விடுதிகள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 இந்தியர்கள் உள்பட 35 பேர் வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ஆகிய மூன்று இந்தியர் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமந்த்ராயப்பா, ரங்கப்பா ஆகிய மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close