இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 03:43 pm
sri-lanka-imposes-curfew-again

இலங்கையில் இன்னும் பதற்றம் தணியாததால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 290 பேர் மரணம் அடைந்ததாகவும் மற்றும் 500 பேர் படுகாயம் அடைந்ததாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. இன்று காலை ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால் இலங்கையில் பதற்றமான நிலை இன்னும் தொடர்ந்து வருகிறது. அதையொட்டி இன்று பிற்பகல் முதல் மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close