இலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 04:40 pm
isis-claims-responsibility-for-sri-lanka-bombings-that-killed-over-300

இலங்கையின் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த கொடூர தாக்குதலை ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

ஐஎஸ் என சுருக்கமாக கூறப்படும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் பயங்கரவாதிகள் குழு இதுவரை இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து எந்தவித பொறுப்பையும் கோரவில்லை. 

இந்நிலையில் ஐஎஸ் ஆதரவாளர்கள் இலங்கையின் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த கொடூர தாக்குதலை கொண்டாடி இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்த பிறகு ஐஎஸ் ஆதரவாளர்கள் டெலிகிராம் மெசேஜிங் செயலியில் இந்த தாக்குதல் தொடர்பாக விரைவாக செய்திகளை பகிா்ந்துள்ளாா்கள்.

குறிப்பாக இந்த தாக்குதல் தொடர்பாக பிரதான ஊடங்களில் வெளியான புகைப்படங்கள், காணொளிகளை இதில் பகிர்ந்துள்ளார்கள். அல்-கொய்தாவின் சில ஆதரவாளர்களும் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை பாராட்டியுள்ளார்கள்.
 
இந்த தாக்குதல் தொடர்பாக ஐஎஸ் எதுவும் கூறாத நிலையிலும் இந்த குழுவின் ஆதரவாளர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ்ஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close