கொழும்பு : மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டெடுப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 11:02 am
srilanka-bomb-find-in-motor-cycle

இலங்கை தலைநகர் கொழும்பில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இச்சம்பவத்தையடுத்து, கொழும்பு உள்ளிட்ட  இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாதவண்ணம் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று காலை, கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.  இதையடுத்து உடனே, வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்க செய்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close