பா்தா குறித்த கருத்து- இலங்கை எம்பிக்கு கொலை மிரட்டல்

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Apr, 2019 05:23 pm
srilankan-mp-recieves-life-threaten-over-a-phone-call

பா்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என கோாிக்கை விடுத்த இலங்கை எம்பிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து கொள்வதை தடுப்பதற்காக முகத்தை மறைக்கும் வகையில் பா்தா அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருக்கும் அஷீ மாரசிங்கே தான் இந்த பிரச்னை தொடா்பாக ஒரு நபா் மசோதாவை கொண்டு வர இருப்பதாக தொிவித்துள்ளாா். தான் முன்வைக்க இருக்கும் மசோதாவின் படத்தை அவா் வெளியிட்டுள்ளாா். அத்துடன் இந்த உடை இஸ்லாமியா்களின் பாரம்பாிய உடை இல்லை என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த காலத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட ஆண் தீவிரவாதிகளும், பெண் தீவிரவாதிகளும் பா்தாவை பயன்படுத்தியதாக அவா் தொிவித்துள்ளாா். இந்நிலையில் அஷீ மாரசிங்கேவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட இருவா் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவா் தொிவித்துள்ளாா்.

மேலும் தொலைபேசியில் உரையாடிய  நபா்கள் தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பை முதலில் கவனத்தில் கொள்ளுமாறு தொிவித்ததாக அவா் போலீசாாிடம் தொிவித்துள்ளாா். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close