இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பா? கொழும்புவில் தொடரும் பதற்றம்!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 10:50 am
blast-heard-in-pugoda-town-40-km-east-of-sri-lanka-capital-colombo

இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு கிழக்கே உள்ள புகோடா(Pagoda) நகரத்தில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் இலங்கை மக்களை மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. மேலும், தீவிரவாதிகள் உள்நுளைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கொழும்புவுக்கு கிழக்கே சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள புகோடா(Pagoda) நகர நீதிமன்ற வளாகத்தில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிந்துள்ளனர். 

முன்னதாக, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close