இலங்கையில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Apr, 2019 11:26 am
sri-lanka-bans-drones-looks-for-bombs-four-days-after-attack

இலங்கையில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்களும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சிவில் விமான சேவை அதிகாரக்குழு இந்த அறிவுறுத்தலை இன்று  விடுத்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை  ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிவில் விமான சேவை அதிகாரக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலை அடுத்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.

நாட்டில் நிலவும் அச்ச நிலைமையை முதலில் நீக்கிடவும், இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயல்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close