இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்!

  முத்துமாரி   | Last Modified : 25 Apr, 2019 01:47 pm
sri-lanka-all-catholic-services-across-the-capital-city-colombo-in-sri-lanka-have-been-suspended-until-april-29

பாதுகாப்பு கருதி, இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களும் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தொடர்ந்து நேற்று கொழும்புவில் திரையரங்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை புகோடா என்ற நகரில் குப்பை கிடங்கில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியானது. 

இதுபோன்ற சம்பவங்களினால் இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், தீவிரவாதிகள் உள்நுளைந்துள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களும் அடுத்த 5 நாட்களுக்கு, மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற ஏப்ரல் 29ம் தேதி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெறாது என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close