இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழப்பு!

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2019 10:55 am
wanted-sri-lanka-radical-hashim-died-in-hotel-attack-president-maithripala-sirisena

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மதகுரு ஜக்ரன் ஹசிம் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன தகவல் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தொடர்ந்து நேற்று காலை புகோடா என்ற நகரில் குப்பை கிடங்கில் கிடந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. மேலும், பல இடங்களில் வெடிகுண்டுகள் குறித்த சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்களினால் இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் நேற்று வெளியாகின. 

இதன் தொடர்ச்சியாக, குண்டுவெடிப்பில் தொடர்புடைய  மதகுரு ஜக்ரன் ஹசிம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் குறித்து தகவல் தெரிந்தால் இலங்கை அரசிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மதகுரு  ஜக்ரன் ஹசிம், குண்டுவெடிப்பில் உயிரிழந்து விட்டதாக வந்த தகவலை அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார்.  

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close