39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Apr, 2019 12:11 pm
sri-lanka-to-stop-visa-on-arrival-for-citizens-of-39-countries

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களையடுத்து, 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா சலுகையை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் 1 பெண் உள்பட 9 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தொடர் குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர் சதி இருக்கலாம் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து 39 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா சலுகையை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா செய்தியாளா்களை சந்தித்து பேசினாா். அப்போது அவா், 39 நாடுகளுக்கு இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டின் சதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தொிவித்தாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close