இலங்கையின் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா!

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2019 03:18 pm
sri-lanka-police-chief-pujith-jayasundara-resigns-over

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் காவல்துறை தலைமை அதிகாரி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தொடர்ந்து நேற்று காலை புகோடா என்ற நகரில் குப்பை கிடங்கில் கிடந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. மேலும், பல இடங்களில் வெடிகுண்டுகள் குறித்த சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்களினால் இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களும் நேற்று வெளியிடப்பட்டன. 

இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அதிகாரிகள் கவனத்தில்கொள்ளவில்லை. இதற்கான இலங்கை மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது என்று அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, அந்நாட்டின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருந்தார். 

அதன்படி, ராணுவத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகிய நிலையில், இன்று காவல்துறை தலைமை அதிகாரி புஜித் ஜெய சுந்தரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் புதிய ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி நியமிக்கப்படவுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close