இலங்கையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தி வைப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 10:04 am
sri-lanka-suspends-visa-on-arrival-program-following-attacks

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில், 250 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில், பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் இருக்கிறதா? என போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, வெளிநாட்டினருக்கு சிறிது காலம் விசா வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close