"இலங்கை தற்போது அமைதியாக உள்ளது" - அதிபர் மைத்திரிபால சிறிசேன

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 01:15 pm
sri-lanka-s-president-says-country-is-now-safe-after-easter-sunday-attacks

குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தற்போது இலங்கை பாதுகாப்பாக உள்ளது என்று அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில், 250 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த தாக்குதலுக்கு முதலில் தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவம்  நடந்து இரு தினங்களுக்கு பின்பு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இதற்கு பொறுப்பேற்று வீடியோ வெளியிட்டது. 

இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, "குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு, தற்போது இலங்கை பாதுகாப்பாக உள்ளது. தாக்குதலை நடத்தியட் தீவிரவாதிகள் 99% பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். 9 தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் இறந்தனர். 

தொடர்ந்து இலங்கை மக்களுக்கு ராணுவ மற்றும் போலீஸ் பாதுகாப்பு முழுமையாக வழங்கப்படும்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close