சுற்றுலாப் பயணிகள் தைரியமாக  இலங்கைக்கு வரலாம்: ரனில் விக்ரமசிங்கே 

  டேவிட்   | Last Modified : 25 May, 2019 08:00 am
tourists-are-invited-by-ranil-wickramasinghe

இலங்கை தொடர் குண்டுவெடிப்பையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இந்நிலையில், இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப்பயணிகள் தைரியமாக வரலாம் எனவும் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். இதனால், இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், மக்களுக்கு அறிவுறுத்தின. இந்த நடவடிக்கையால் சுற்றுலா மூலம் வருவாய் பெரும் சரிவை சந்தித்தது. 

தற்போது இலங்கையில் இயல்புநிலை திரும்பியுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாப்பயணிகள் எந்த அச்சமுமின்றி வரலாம் என்றும், தங்கள் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை நாடுகள் வாபஸ் பெற வேண்டும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close