பயங்கரவாதத்தால் இலங்கையின் ஒற்றுமை குலைந்துவிடாது : பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 03:33 pm
terror-cannot-defeat-spirit-of-sri-lanka-pm-modi

கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் ஒற்றுமையை குலைத்துவிடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒருநாள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை சென்றுள்ளார். அங்கு அண்மையில், தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் கொழும்பில் மலரஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் பேசும்போது. "கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் ஒற்றுமையை குலைத்துவிடாது. இலங்கையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் இந்நாட்டு மக்களுக்கு இந்தியா எப்போதும் பக்கபலமாக இருக்கும்" என்று நரேந்திர மோடி உறுதியளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close