இலங்கையில் ராணுவ வாகனம் மீது ரயில் மோதி விபத்து; 6 வீரர்கள் பலி!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 04:37 pm
six-army-personnel-killed-in-kilinochchi-train-collision

இலங்கையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக ராணுவ வாகனம் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற ‘யாழ் தேவி’ ரயில் கிளிநொச்சி மற்றும் முருகண்டி ரயில் நிலையத்திற்கு இடையில் வரும்போது, ரயில்வே கேட்டை ராணுவ வாகனம் ஒன்று கடந்தது. 

அப்போது, தண்டவாளத்தில் வந்த ரயிலானது, ராணுவ வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close