அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2019 12:11 pm
let-s-all-travel-together-gotabaya-rajapaks

இலங்கையின் புதிய கோணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று, புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளார் கோத்தபய ராஜபக்சே நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல, வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50% வாக்குகளை எட்டி முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் அவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close