இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2019 04:36 pm
gotabaya-rajapaksa-wins-sri-lankan-presidential-election-official-announcement

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே  கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகளை பெற்றார்.  சஜித் பிரேமதசாவை விட 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதசா தோல்வி அடைந்தார். 

கோத்தபய ராஜபக்சே (69,24,255) 52.25% வாக்குகளும், சஜித் பிரேமதாசா (55,64,239) 41.99% வாக்குகளும் பெற்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close