கவனிக்க முடியாத பெற்றோர்.. தாகத்திற்கு தண்ணீர் குடித்த சிறுவன் உயிரிழப்பு..

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 09:49 am
drug-overdose-deaths

பாதுகாவலர்களின் கவனக்குறைவால் தாகத்திற்கு தண்ணீருக்கு பதிலாக உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று மட்டக்களப்பு. தமிழர்களை அதிகம் கொண்டுள்ள இங்குள்ள தம்பலாவத்தை சேர்ந்த சிறுவனின் தந்தை வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றார். சிறுவனின் தாயார் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களின் ஒரு வயது மகன் ஹரிகரன் துசேன்  உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் என நினைத்து உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்கம் அடைந்தார். இதனை அறிந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close