திருமணத்திற்கு தாமதமாக வரும் மணப்பெண்களுக்கு அபராதம்

  Anish Anto   | Last Modified : 06 Jan, 2018 07:52 am


இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிக்கன் தேவாலயங்களில் திருமணத்திற்கு தாமதமாக வரும் மணப்பெண்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

வழக்கமான நாட்களிலேயே பெண்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் தங்களை அலங்காரப்படுத்திக் கொள்ள பல மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் அவர்களின் திருமணம் என்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பேசியல் முதல் அனைத்து வித அழகுபடுத்தும் முயற்சிகளிலும் இறங்கி விடுவர். ஆனாலும் திருமண நாள் அன்று மணமகனை விட மணமகள் சற்று தாமதமாகவே வருவார். இவ்வாறு தாமதமாக வரும் மணமகள்களால் வெறுப்படைந்த இங்கிலாந்து தேவாலயம் ஒன்று திருமணத்திற்கு தாமதமாக வரும் மணமகளுக்கு அபராதம் விதிக்கும் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதன் படி திருமண நாள் அன்று மணமகன் 8,600 ரூபாய்க்கு செக் ஒன்றை கொண்டு வந்துவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாக மணமகள் வந்தால் திருமணத்தை நடத்தி வைக்கும் விகார் அந்த செக்கை எடுத்துக் கொள்வார். இல்லையேல் மணமகன் திரும்ப அதனை பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையானது தேவாலயத்தில் பணி புரிவோருக்கு பகிர்ந்தளிக்கப்படும். இது குறித்து பேசிய விகார் ஒருவர், திருமணத்திற்கு தாமதமாக வரும் பழக்கம் மணப்பெண்கள் இடையே தற்போது அதிகரித்துள்ளது. அதனை தடுக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது"என்றார். இந்த திட்டத்தின் காரணமாக தற்போது மணப்பெண்கள் 10 நிமிடம் முன்னதாகவே தேவாலயங்களுக்கு வந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close