“தமிழர்களால் பெருமையடைகின்றோம்” இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து!

  Shanthini   | Last Modified : 14 Jan, 2018 08:25 pm


உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தை திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், உலகத் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தமிழ் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியை வீடியோ பதிவில் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் “இங்கிலாந்து பல்வேறு வழிகளில் வளர்ச்சிப் பெற்றதுக்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால் நாங்கள் பெருமை அடைகின்றோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close