ஒரு நிமிடம் லேட்: பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்!

  முத்துமாரி   | Last Modified : 01 Feb, 2018 05:56 pm


பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு ஒரு நிமிடம் லேட்டாக வந்ததற்காக, அமைச்சர் ஒருவர் மன்னிப்பு கேட்டதுடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் தெரசாமே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று அந்நாட்டு நாடாளுமன்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பல்வேறு திட்டங்கள் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள மைக்கேல் பேட்ஸ் பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர் அங்கு இல்லை. 

பின்னர் தாமதமாக வந்த பேட்ஸ், எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாததற்கும், தாமதமாக வந்ததற்கும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார். என்னுடைய கடமையை நான் செய்யத் தவறிவிட்டேன். எனவே என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார்.  மேலும், உடனடியாக அவையை விட்டும் வெளியேறியுள்ளார். 

ஆனால் பிரதமர் தெரசாமே அவரது ராஜினாமாவை நிராகரித்துள்ளார். மேலும், அந்த எதிர்க்கட்சி உறுப்பினரும், 'மன்னிப்பு கேட்டு விட்டார். இதற்காக எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார். 

மைக்கேல் பேட்ஸ் எவ்வளவு நிமிடம் தாமதமாக வந்தார் தெரியுமா? வெறும் ஒரு நிமிடம் மட்டுமே.. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close