இங்கிலாந்தில், தலைப்பாகை அணிந்ததற்காக சீக்கியருக்கு நேர்ந்த அவலம்!

  Shalini Chandra Sekar   | Last Modified : 11 Mar, 2018 08:27 pm


இங்கிலாந்தில் நாட்டிங்ஹம்ஷைரின் மன்ஸ்பீல்ட் என்ற இடத்தில் உள்ள உணவு விடுதிக்கு நண்பர்களுடன் சென்ற அம்ரிக் சிங் (22) என்ற சீக்கியர் தலைப்பாகை அணிந்திருந்த  காரணத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியரான அம்ரித், அம்ரிக், நாட்டிங்காம் டிரன்ட் பல்கலையில் 4ம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். நண்பர்களுடன் ஒரு உணவு விடுத்திக்கு சென்றுள்ளார். அப்போது, தலைப்பாகை அணிந்திருந்தார் என்பதற்காக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர் உணவு விடுதி ஊழியர்கள்.

இதைப்பற்றி அவர் கூறுகையில், 'ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து, விடுதியில் தலைப்பாகை அணிய விதிகள் இல்லை. இதனால் தலைப்பாகையை அகற்ற வேண்டும் எனக்கூறினார். அதற்கு நான் அவரிடம், 'இதனை நான் எனது மத வழிபாடு முறையாக அணிந்துள்ளேன். இது எனது தலைமுடியை பாதுகாக்கும்' எனக்கூறினேன். ஆனால், அதனை ஏற்காத அவர், அகற்றிதான் ஆக வேண்டும் என்றார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் என்னை இழுத்து சென்று வெளியே தள்ளினார். இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனது முன்னோர்கள் இங்கிலாந்து ராணுவத்திற்காக உழைத்துள்ளனர். நானும், எனது பெற்றோரும் இங்கிலாந்தில் பிறந்தவர்கள். நாட்டின் சட்ட திட்டத்தை மதிப்பவர்கள்' எனக் கூறினார்.

சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள விடுதி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் சீக்கியர்களுக்கு அவமரியாதை நேர்வது இது முதல்முறை இல்லை. சில மாதங்களுக்கு முன்பு. இங்கிலாந்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரின் டர்பனை, ஆங்கிலேயர் ஒருவர் கழற்றியுள்ளார். அப்போது, குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நபர் கோஷம் எழுப்பியுள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.