பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

  முத்துமாரி   | Last Modified : 14 Mar, 2018 11:28 am


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று அகால மரணமடைந்தார். 

உலகத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21 வயதில் நரம்பு செயலியக்கம் காரணமாக உடல் அசைவின்றிச் சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தவர். உடல் செயல் இழந்த போதும் தொடர்ந்து இயற்பியல் துறையில் பல சாதனைகளைப் படைத்தவர். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல் கருத்துக்களில் அவரது ஆராய்ச்சி முடிவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 

தற்போது 76 வயதாகும் அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்குப் பல அறிவியலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close