17 மணி நேரம் பறந்து சாதனை படைத்த 'நான் ஸ்டாப்' விமானம்

  முத்துமாரி   | Last Modified : 26 Mar, 2018 11:19 am


ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 17 மணி நேரம் இடைவிடாது பறந்து குவான்டாஸ்(Qantas) விமானம் சாதனை படைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பர்த் நகரில் இருந்து இங்கிலாந்து லண்டன் நகருக்கு நேரடி விமானம் எதுவும் இல்லை. முதல் முறையாக குவான்டாஸ் விமான நிறுவனம் பர்த்- லண்டன் நகருக்கிடையே இடையே நேரடி விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது. மார்ச் 24ம் தேதி மாலை 7 மணிக்கு பர்த் நகரில் இருந்து கிளம்பிய விமானம் நேற்று(மார்ச் 25) காலை 5 மணிக்கு லண்டன் வந்தடைந்தது. சுமார் 9,000 மைல் தூரம் இடைவிடாமல் பயணித்துள்ளது இந்த விமானம். இதில் 200 விமானிகள் மற்றும் 16 ஊழியர்கள்  பயணம் செய்துள்ளனர். இந்த பயணத்தின் மூலம் இடைவிடாது நீண்ட தூரம் பறந்த விமானம் என்ற பெருமையை குவான்டாஸ் விமானம் பெற்றுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close