கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு

  முத்துமாரி   | Last Modified : 01 Apr, 2018 05:11 pm


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு நேற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

உலகத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21 வயதில் நரம்பு செயலியக்கம் காரணமாக உடல் அசைவின்றிச் சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார். உடல் செயல் இழந்த நிலையிலும் இயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாடு, அண்டவியல் கருத்துக்களில் அவர் கண்ட ஆராய்ச்சி முடிவுகள் அவரது திறமையை இந்த உலகிற்கு பறைசாற்றுகின்றன.

பல்வேறு சாதனைகளை புரிந்த அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மார்ச் 14ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பல தலைவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

தொடர்ந்து இன்று இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவர் 76 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைவு கூறும் பொருட்டு 76 முறை மணி ஒலிக்கப்பட்டது. அவரது இறுதிசடங்கின் போது அனைவரும் கர கோஷத்துடன் தங்களது அஞ்சலியை செலுத்தினர். அவரது அஸ்திகரைப்பு ஜூன் 15ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள விஞ்ஞானி ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே புதைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற விஞ்ஞானிகளான சர் ஐசக் நியூட்டன் மற்றும் சார்லஸ் டார்வின் ஆகியோரது கல்லறைகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.