காமன்வெல்த் தலைவராக சார்லஸை அறிவித்தார் எலிசபெத்!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 11:05 am


காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக, இளவரசர் சார்லஸ் இருப்பார் என பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளார். 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தலைமையில் லண்டன் மாநகரில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி இதில் கலந்துகொண்டுள்ளார். 

மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய ராணி இரண்டாம் எலிசபெத், காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை ஏற்று நடத்துவார். எனக்கு எப்படி ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ அதுபோன்று அவருக்கும் உறுப்பினர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்க உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களது அதிகாரபூர்வ ஒப்புதலை அளித்த பிறகே சார்லஸ் தேர்ந்தெடுக்கப்படுவார். 

நாளை (ஏப்ரல் 21) இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை சார்லஸை கூட்டமைப்பின் தலைவராக தேர்தெடுக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close