பிரிட்டன் இளவரசர் திருமணம்: மணமகளின் தந்தை மிஸ்ஸிங்!

Last Modified : 17 May, 2018 09:47 pm


பிரிட்டன் இளவரசர் ஹேரி, அமெரிக்க நடிகை மேகன் மார்கில்லை திருமணம் செய்யவுள்ள நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு, மணமகளின் தந்தை வரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான மேகன் மார்கிலும், பிரிட்டன் இளவரசர் ஹேரியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்தின் சம்பிரதாயங்களுடன், உலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட திருமணம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்நிலையில், இளவரசியாகப்போகும் மேகன் மார்கிலின் தந்தை, சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். தன்னை புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு நிறுவனத்துக்கு உரிமை கொடுத்து, அவர்களிடம் இருந்து பணம் வாங்கியிருந்தார். ராஜ குடும்பத்தின் வழக்கப்படி இது விதிமீறல் என்பதால் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, திருமணத்திற்கு தான் வரவில்லை என அவரை தரப்பில் கூறப்பட்டிருந்தது. 

ஆனால், திருமணத்தில் தந்தை மகளை கரம்பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால், மார்கில் தந்தையை சமாதானப்படுத்தி அழைத்து வர முயற்சித்தார். ஆனால்,  திருமண நேரத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையால் திருமணத்திற்கு வரமுடியாது என மார்கில் உறுதி செய்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close