அரசு விதியை மீறி தாயாரிக்கப்பட்ட ஹேரி - மேகன் திருமண கேக்

Last Modified : 18 May, 2018 11:08 pm

பிரிட்டன் இளவரசர் ஹேரி, நடிகை அமெரிக்க நடிகை மேகன் மார்கெல் ஆகியோரின் திருமண கேக் பாரம்பரிய விதிகளை மீறி தயாரிக்கப்பட்டுள்ளதாம். அ்துவும் இந்தக் கேக் 5 பேர் கொண்ட குழுவால் 6  நாட்களாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

பிரிட்டன் அரசு குடும்ப திருமணங்களின்போது, முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களால் ஆன ஃப்ரூட்கேக் வழங்குவது அரச குடும்பத்தின் பாரம்பரியம். ஆனால் இம்முறை மேகனின் விருப்பப்படி அமெரிக்க சமையல்கலை வல்லுநர் கிளேர் ப்டக் என்பவர், இந்தத் திருமணத்திற்கென வெள்ளை நிற திருமண கேக்கினை தயாரித்துள்ளாராம். 

மார்க்கெலைப் போன்றே, ப்டக்கும் கலிபோர்னியாவில் வளர்ந்தவர், லண்டனில் வசிப்பவர். அவரது ஹேக்னே பேக்கரி ஒயலெட் கேக்ஸ் நிறுவனம், பருவகாலத்தில் கிடைக்கும், ஆர்கானிக் உட்பொருட்களைக் கொண்டு கேக் தயாரித்து வருகிறது. ஹேரி மற்றும் மேகனின் விருப்பப்படி,  மஞ்சள் நிற கொன்றை மலர்களாலும் பட்டர் க்ரீம் மற்றும் எல்டர்பெர்ரி பழங்களாலும் கேக் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட உள்ளது. 


இந்த கேக் வசந்த காலத்தின் பிரகாசத்தை குறிக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இதற்காக வல்லுநர் கிளேர் ப்டக் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு கேக் தயாரிப்பில் ஈடுபட்டது. இதற்கு 6 நாட்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close