லண்டனில் வாத்துக் குஞ்சுகளுக்கு தந்தையான நாய்! (வீடியோ)

Last Modified : 24 May, 2018 10:54 pm

இங்கிலாந்தில் தாய் இல்லாமல் தவித்த வாத்து குஞ்சுகளை, நாய் பாசத்துடன் அரவணைத்து வருவது அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்வதாக உள்ளது. 

இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில், வாத்து ஒன்று 9 குஞ்சுகள் பொரித்தது. வாத்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்தது. இதை அங்கு வளர்ந்து வந்த நாய் கவனித்து வந்தது. இந்த நிலையில், அந்தத் தாய் வாத்து கடந்த வாரம் திடீரென காணாமல் போனது. 

குஞ்சுகள் அதனைத் தேடி தவித்தன. இதை பார்த்த நாய், வாத்து குஞ்சுகளின் அருகில் சென்று அவற்றை அரவணைத்து கொண்டது. குஞ்சுகளும் பின்னர் அந்த நாயுடன் ஒன்றிவிட்டன. அதன் பின்பு நாய் செல்லும் இடத்திற்கு குஞ்சுகளும் செல்கின்றன. நாயின் மீது ஏறி விளையாடுவதும் தூங்கும்போது அதன் அரவணைப்பில் இருப்பதும் நாயின் முதுகில் அமர்ந்து சவாரி செய்வதுமாய் இருக்கின்றன. 


இது தொடர்பாக ஸ்டான்ஸ்டட் கோட்டையின் இயக்குநர் ஜெராமி கோல்ட்ஸ்மித் கூறுகையில், "குஞ்சுகளிடம் நாய் போகும்போது முதலில் பயந்தோம். ஆனால், தாய் வாத்து இல்லாததை அறிந்து, குஞ்சுகளை அரவணைத்த விதம் கண்டு நெகிழ்ந்து போனோம். ஒரு தந்தையைப் போல் அக்கறையாக பொறுமையாக குஞ்சுகளை கவனிக்கிறது அந்த நாய்"  என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close