'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்

  Padmapriya   | Last Modified : 11 Jun, 2018 12:37 pm
first-james-bond-girl-eunice-gayson-dies-at-90

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் படமான 'டாக்டர் நோ' படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் தனது 90-வது வயதில் லண்டனில் காலமானார். 

ஆக்‌ஷன் தூப்பறிவாளர் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட பட வரிசையின் முதல் படமான 'டாக்டர் நோ' படத்தில் கதாநாயகனாக சீன் கேனரி மற்றும் கதாநாயகியாக யூனிஸ் கேசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் 1962-ம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை கண்டது. அடுத்தடுத்த ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் 'பிரம் ரஷியா வித் லவ்' என்னும் படத்தில் சீன் கேனரி - யூனிஸ் கேசன் ஜோடியாக இணைந்து நடித்தனர். பின்னர், பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்த யூனிஸ் கேசன், பிற்காலத்தில் தொலைக்காட்சி நாடகங்களிலும், தொடர்களிலும் தோன்றினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த யூனிஸ் கேசன் கடந்த 8-ம் தேதி லண்டன் நகரில் உள்ள இல்லத்தில் தனது 90-வது வயதில் காலமானாதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். யூனிஸின் மறைவுக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹாலிவுட், பிரிட்டன் திரையுலக பிரமுகர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close