இந்திய வங்கிகளுக்கு 1.8 லட்சம் கோடி செலுத்த மல்லையாவுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 12:01 pm
uk-court-orders-vijay-mallya-to-pay-costs-to-indian-banks

இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட வழக்கு செலவுக்காக அந்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா 2 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டார். 

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் புகுந்து இருக்கும் மல்லையாவை, இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

மேலும், விஜய் மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்குவதற்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் அதோடு, விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இதிலிருந்து தப்பிக்க, சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்க, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்திடம் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், கடந்த மாதம் 8–ஆம் தேதி அந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா மறுத்து விட்டு உத்தரவிட்டார். மேலும்,  விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் தனது உத்தரவில் வழங்கியுள்ளார். 

இதற்கிடையே, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரும் வழக்கின் இறுதி விசாரணைக்காக, அவர் அடுத்த மாதம் 31-ஆம் தேதி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close