பிரெக்சிட்டை திரும்பப் பெறுங்கள்: லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 11:05 am
thousands-protest-for-new-brexit-referendum

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை விலகச் செய்யும் பிரெக்சிட் முடிவை திரும்பப் பெறுமாறு, ஆயிரக்கணக்கானோர் லண்டன் நகரின் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

2016ம் ஆண்டு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை விலகச் செய்ய வேண்டுமா என்பது குறித்து பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வெகு சிலராலேயே வரவேற்கப்பட்ட பிரெக்சிட் நடவடிக்கை, வெற்றி பெரும் என ஆளும் கட்சி எதிர்க்கட்சி என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த முடிவால் பிரிட்டன் பொருளாதாரம் வரலாறு காணாத பின்னடைவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், பிரிட்டன் பிரிய வேண்டும் என்ற முடிவு நூலிழையில் வெற்றி பெற்றது. 

பொதுவாக்கெடுப்பில் பிரெக்சிட் வெற்றி பெற்றதால், அதை அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால், தன்னால் அதை செய்ய முடியாது என கூறி, பிரெக்சிட் பொதுவாக்கெடுப்புக்கு பொறுப்பேற்று அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த தெரசா மே தலைமையில் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதுவரை இந்த பிரெக்சிட் முடிவால் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால், பிரிட்டன் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பிரெக்சிட்டால் பொருளாதார நெருக்கடி, அடிப்படை சேவைகளில் நிதி தட்டுப்பாடு என பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் நேற்று லண்டனில் போராட்டம் நடத்தினர். மறுபொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close