நான் ஏன் இந்தியா வர வேண்டும்? - மல்லையா ஆவேசம்

  Padmapriya   | Last Modified : 09 Jul, 2018 04:14 pm
indian-government-wants-to-bring-me-back-to-win-votes-vijay-mallya

இந்தியாவில் தேர்தல் சமயம் என்பதால், என்னை அழைத்துச் சென்று அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்... நான் ஒரு இங்கிலாந்து குடிமகன்... நான் ஏன் இந்தியா செல்ல வேண்டும் என்று விஜய் மல்லையா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கடனாக பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் விஜய் மல்லையா. பணத்தைத் திரும்பப் பெற வங்கிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால், லண்டனில் அமர்ந்துகொண்டு என்னதான் நடக்கும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று இருக்கிறார் மல்லையா. இந்தநிலையில், அவரது சொத்துக்களை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால், மல்லையா சற்று ஆடிப்போயுள்ளார். 

லண்டனில் இருக்கும் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "எனது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் நான் ஒப்படைத்துள்ளேன். என் பெயரில் உள்ள சொத்துக்கள், வீடுகளை பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால், லண்டனில் எனது குழந்தைகள் மற்றும் தாய் பெயரில் இருக்கும் சொத்துக்களை எவ்வாறு இவர்கள் பறிமுதல் செய்ய முடியும்.

நான் எப்போதும் இங்கிலாந்து பிரஜை தான். இந்திய குடிமகன் அல்ல. அதனால் எதற்காக நான் இந்தியா வர வேண்டும்? நான் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுவது எப்படி சரியாகும்? இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. இது இந்தியாவில் தேர்தல் நடக்கும் ஆண்டு. அதனால் அதிக வாக்குகளை பெறுவதற்காக என்னை இந்தியா அழைத்து சென்று, சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்" என்றார்.

சமீபத்தில் மல்லையாவின் ரூ.393 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏலம் விட லண்டன் கோர்ட் அனுமதி அளித்தது. மல்லையா வழக்கில் இறுதி வாதங்கள் ஜூலை 31 உடன் நிறைவடைகிறது. இதனால் அவர் மீதான வழக்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து முழுவதும் பறிபோவதைத் தடுக்க மல்லையா தற்போது பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close