பிரிட்டன் இளவரசர் ஜார்ஜை கொல்ல முயற்சித்த தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை  

  Padmapriya   | Last Modified : 14 Jul, 2018 05:08 pm
man-who-urged-prince-george-attack-given-life-sentence

பிரிட்டன் இளவரசர் ஜார்ஜை (4 வயது) கொல்ல திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதுத்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியின் மூத்த மகன் ஜார்ஜ் (வயது 4).  கடந்த மாதம் முதல் தென்மேற்கு லண்டனில் உள்ள பள்ளியில் மழலையர் பள்ளி கூடத்தில் சேர்க்கப்பட்டார். 

இந்த நிலையில், இளவரசர் ஜார்ஜை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதி திட்டமிட்டது தெரிய வந்தது.  தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் உஸ்னைன் ரஷீத் (வயது 32) என்பவரை லண்டன் போலீசார் கைது செய்யப்பட்டார். 

இவர் கடந்த அக்டோபரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் குழு சாட்டிங்கில் ஈடுபட்டது. அப்போது, இளவரசர் ஜார்ஜை கொல்வதற்கு ஏதுவான நேரம் என்று கூறி அழைப்பு விடுத்தது உள்ளிட்ட தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளது.  ஜார்ஜின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் இளவரசருடன் இரண்டு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் இருப்பது போன்று வடிவமைத்து, அதில் அரச குடும்பம் கூட விட்டு வைக்கப்படாது என எழுதப்பட்ட புகைப்படத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

அதோடு, பள்ளிக்கூடம் விரைவில் தொடங்குகிறது என்பாத்து போலான விவரங்களும் ஐ.எஸ். தீவிரவாத குழுவுக்கு உஸ்னைன் ரஷீத்திடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிரவாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஷீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close