இங்கிலாந்து கிராமத்தில் நத்தைகளுக்கு உலக சாம்பியன்ஷிப் (வீடியோ)

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 05:28 am
snail-racing-hosta-2018-world-champion-crowned-in-uk

மெதுவாக ஓடும் பந்தயத்தை கண்டிருப்போம். ஆனால் மெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தைகே இங்கு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.  இந்தப் போட்டியில் இங்கிலாந்து கிராமத்தைச் சேர்ந்த நத்தை பட்டம் வென்றுள்ளது. 

இங்கிலாந்தின் நார்ஃபோக் பகுதியில் நத்தைகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 150-க்கும் அதிகமான நத்தைகள் போட்டியாளர்களாக பங்கேற்றன. வட்ட வடிவ மேஜையில் அடுத்தடுத்து பல்வேறு நிறங்களில் வட்டங்களை வரைந்து போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது. போட்டி தொடங்கும் முன்னரே, ஆர்வ மிகுதியில் குவிந்த மக்கள், தங்களுக்கு பிடித்தமான நத்தைகளை ஊக்கப்படுத்தினர். 

இந்த ஆண்டுக்கானப் போட்டியில் குறைந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை அடைந்த இங்கிலாந்தின் க்ரிம்ஸ்டன் என்ற கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஹோஸ்ட்டா என்ற நத்தை, சாம்பியன் பட்டம் வென்றது. 

வினோதமான இந்தப் பந்தயம், இங்கிலாந்து 196-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு இந்தப் போட்டி இங்கிலாந்தின்  கோங்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்களது நத்தைகளை தயார்படுத்தி வருகின்றனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close