லண்டன் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனின் மெழுகு சிலை!

  Padmapriya   | Last Modified : 24 Jul, 2018 07:54 pm
deepika-padukone-to-join-superstars-at-madame-tussauds-with-wax-figures-in-london

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது. 

இது குறித்து தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "எனது மெழுகு சிலை உறுவாக்கம் குறித்து நிபுணர்களிடம் பேசிக்கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. என் வாழ்நாளில் ஒரு சிறப்பான அனுபவமாய் நான் இதனை கருதுகின்றேன். எனது மெழுகு சிலைக்காக நானும் காத்திருக்கின்றேன். என் சிறுவயதில் பெற்றோருடன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளேன். இப்போது அதே இடத்தில் எனது சிலையும் இடம்பெறவுள்ளது பெரும் மகிழ்சி அளிக்கின்றது " என தெரிவித்துள்ளார்.

லண்டனில் மிகவும் பிரபலமானது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம். தீபிகா படுகோன் சிலை வைக்கப்படுதற்கான பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் அடத்தாண்டு தொடக்கத்தில் அவரது சிலை நிருவப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக தீபிகாவை சந்தித்த மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியக நிபுணர்கள் அவரை 200 கோணங்களுக்கு மேலான அளவுகளை எடுத்துள்ளனர். மிகச் சரியான வடிவமைப்பினை அமைக்க பல்வேறு கோணங்களில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். 

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், சச்சின் டெண்டுல்கர், ஷாரூக் கான் ஆகியோரது சிலைகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close