இங்கிலாந்தில் குழந்தை மீது ஆசிட் வீச்சு: தந்தையே செய்த கொடூரம் 

  Padmapriya   | Last Modified : 26 Jul, 2018 03:59 am
acid-attack-on-three-year-old-boy

இங்கிலாந்தில் 3 வயது குழந்தை மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை மீது பெற்ற தந்தையே ஆசிட் வீசியதும் தெரிய வந்துள்ளது. 

இங்கிலாந்தின் ஒர்செஸ்டர் என்ற பகுதியில் மளிகைக் கடை அருகே 3 வயது குழந்தை மீது சில நாட்கள் முன்பு ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முகம் மற்றும் கை ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் அந்தக் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றது. 

இதனிடையே சம்பவ பகுதியில் கைது செய்யப்பட்ட நபர் குழந்தையின் தந்தை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியானது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாக அந்தப் பெண் தனது குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேறி தனது கணவருடைய குடும்பத்தார் யாரும் வசிக்காத பகுதியாகிய ஒர்செஸ்டர் பகுதியில் தனது குழந்தையுடன் மறைந்து வாழ்ந்து வந்ததும், பின்னர் அவரது வசிப்பிடத்தை கணவனின் குடும்பத்தினர் அறிந்த நிலையில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தள்ளு வண்டியில் இருந்த குழந்தை மீது ஆசிட் வீசப்பட்டதை நேரில் கண்டவர்கள் இது குறித்து போலீஸில் காட்சியளித்துள்ளனர். பிரதானப் பகுதியில் நடந்த இந்தக் கோரச் சம்பவம் பலரையும் அங்கு பதைப்பதைக்க வைப்பதாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாயைக் குறிவைத்து வீசப்பட்ட ஆசிட், தவறுதலாக குழந்தை மீது பட்டதால் அதன் முகமும் கைகளும் எரிந்து போயின. கைது செய்யப்பட்ட நபர்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மற்ற நபர்கள் குழந்தையுடைய தந்தையின் குடும்பத்தார் எனக் கூறப்படுகிறது. 

இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close