தூங்கி எழும்போது படுக்கையில் மலைப்பாம்பு: லண்டன் பெண்ணுக்கு அதிர்ச்சி 

  Padmapriya   | Last Modified : 30 Jul, 2018 01:29 pm
woman-wakes-to-find-python-in-kensington-bed

லண்டனில் ஒரு பெண் அவர் தூங்கி எழும்போது படுக்கையில் ராயல் வகை மலைபாம்பு சுருண்டு படுத்துக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

மேற்கு லண்டனிலன் கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை காலை தூங்கி எழும்போது தனது படுக்கையில் ராயல் என்ற வகை மலைப்பாம்பு சுருண்டவாறு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். பின்னர் சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், உடனடியாக விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தப் பாம்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டது.

பின்னர், அந்தப்பெண் வசிக்கும் அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் மறுநாள் இரவு அந்தப் பாம்பு இருந்ததைப் பார்த்து அதிகாரிகளுக்கு மற்றொருவர் தகவல் அளித்தார். அந்த மலைப்பாம்பு அதேப் பகுதியில் வசிக்கும் நபர்களின் வீட்டிலாவது செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து மலைப்பாம்பை தேடி கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை மீட்டு விலங்குகள் நல காப்பகத்தில் அனுமதித்தனர். 

ராயல் வகை மலைப்பாம்பு என உறுதிப்படுத்தப்பட்ட அது சுமார் 3 அடி நீளம் இருந்தது. Ball Python என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பாம்பு தூங்கும்போது பந்தைப் போல சுருண்டு உருண்டையாக தெரியும்.  மேற்கு ஆப்பிரிக்க மற்றும் சில பகுதிகளில் வாழும் இவை மிகவும் சாதுவான இது, எலி போன்ற விலங்குகளை சாப்பிடும். சில நாடுகளில் இந்த ராயல் பாம்பு செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதி உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close