மல்லையாவை அனுப்பும் முன் இந்திய சிறையை காட்டுங்கள்: பிரிட்டன் நீதிமன்றம்

  shriram   | Last Modified : 01 Aug, 2018 02:06 am
uk-court-asks-video-of-mumbai-jail-cell

விஜய் மல்லையா விவகாரம் குறித்து பிரிட்டனின் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின் போது, இந்தியா சிறைகளை வீடியோ மூலம் பார்வையிட வேண்டும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

பல்வேறு இந்திய வங்கிகளிடம் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பித் தராமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு இன்று பிரிட்டன் நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது.  

அப்போது, இந்தியா கொண்டு வரப்பட்டால், மும்பையில் மல்லையா அடைக்கப்படும் சிறையில் போதிய வெளிச்சம் கூட கிடையாது, என அவரது தரப்பு கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம், மும்பை சிறையை வீடியோ மூலம் காட்டவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக இந்திய தரப்புக்கு 3 வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் நடந்த விசாரணையில், இந்திய தரப்பு சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும், இந்திய அரசு தரப்பிலும் வெளிநாட்டில் பணம் பதுக்கி வைத்திருக்கும் மல்லையா, நீரவ் மோடி போன்றோரது சொத்த்துக்களை மொத்தமாக பார்த்தது கிடையாது 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close